உள்ளூர் செய்திகள்

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு துவங்கியது: சி.எஸ்.இ., இ.சி.இ. பாடப்பிரிவுகளில் ஆர்வம்

புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை துவங்கியது. இன்று, கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 முதல் 198.75 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார். பின்னர் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். முதல் 10 இடங்களைப் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு... 1. ஹரிதா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி2. பிரபு - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி3. ரவிசங்கர் - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை4. விஷ்ணுபிரியா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி5. ராமு - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி6. சூர்ய மல்லிகராஜ் - மெக்கானிக்கல் - கிண்டி பொறியியல் கல்லூரி7. பிரதிக்ஷா - சி.எஸ்.இ. - கிண்டி பொறியியல் கல்லூரி8. ராகுல் பாலாஜி - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை9. தர்ஷினி மீனா - இ.சி.இ. - பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை10. யோகராஜ் - மெக்கானிக்கல் - பி.எஸ்.ஜி. கல்லூரி கோவை. 10 பேரில் 5 பேர் சி.எஸ்.இ. பிரிவினையும், 3பேர் இ.சி.இ. பிரிவினையும் மற்றும் 2 பேர் மெக்கானிக்கல் பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் "உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சிறப்பாக இருப்பதால் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. கல்லூரியை தேர்ந்தெடுத்ததாக" மாணவர்கள் கூறினர். தொடர்ந்து இன்று இரவு 7 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர், கூடுதல் செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்