துணைவேந்தர்களை நீக்கும் அதிகாரம் - சட்டத்தை திருத்தும் மசோதா
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்த, சட்டதிருத்த முன்வடிவு: தமிழகத்தில் உள்ள மதுரை காமராசர், அண்ணா பல்கலை, பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலை, அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பெரியார் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, திருவள்ளுவர் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலை ஆகியவற்றின் சட்டங்கள், துணைவேந்தரை நீக்குவதற்கான வழிமுறையை கொண்டிருக்கவில்லை. மேலும், பல்கலையின் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, தமிழ்நாடு குடியியல் அரசுப் பணி விதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் மற்றும் பிற விதிகளுக்கு பொருந்தவில்லை. எனவே, இவற்றுக்கு பொருந்தத்தக்க வகையில், பல்கலை விதிகள் திருத்தப்படுகின்றன. இவ்வாறு சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.