அரசு கலைக் கல்லாரியில் பட்ட மேற்படிப்பு வரலாற்றுத் துறை கருத்தரங்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லாரியில் பட்ட மேற்படிப்பு வரலாற்றுத் துறை சார்பில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பங்களிப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் கன்னிகா தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் கலிய மூர்த்தி வரவேற்றார். வரலாற்றுத் துறைத் தலைவர் சரவணன் அறிமுகவுரையாற்றினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி மேனாண் முதல்வர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) உஷா ரகோத்தம், கடலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்று பட்ட மேற்படிப்பு துறை தலைவர் ராயப்பன், அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.