உள்ளூர் செய்திகள்

மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு

சிவகங்கை: சென்னையில் நடக்கும் மாநில அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க சிவகங்கை பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கம் சிவகங்கையில் நடந்தது. வேளாண்மைத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்னை, சவால் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்கள் பேசினர். இதில், சிவகங்கை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., பள்ளி 9ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் ராஜலிங்கம், முப்பையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கீர்த்தனா ஆகியோர் மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் பரிசு வழங்கி பாராட்டினார். நேர்முக உதவியாளர் சேக்கப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்