உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து ஆய்வு படிப்பு மேற்கொள்ள ஐ.ஐ.டி., திட்டம்

அடையாறு: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆய்வு படிப்பு மேற்கொள்ள, ஐ.ஐ.டி., திட்டமிட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், சர்வதேச மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில், ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து, பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளை சேர்ந்த, 60க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு மாணவர்கள், பல்வேறு குழுக்களாக கலந்து கொண்டு மராட்டிய நடனமாடினர். மேலும், ஜப்பான், ஜெர்மனி நாடுகளின் மாணவர்கள், பாலிவுட் நடனங்கள் நிகழ்த்தினர். இந்தியாவின் பல்வேறு மாநில உடைகளை அணிந்தபடி, பேஷன் ஷோவும் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மற்றும் சர்வேதேச மாணவர்கள் அமைப்பின் டீன், டாக்டர் நாகராஜன் கூறுகையில், "ஐ.ஐ.டி.,யில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் இணைந்து, இணை பிஎச்.டி., மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்