பழங்குடியின சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, அம்பலமூலா பகுதியில் செயல்படும் நீலகிரி - வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்ந்தவர்களில், 100 மாணவர்களுக்கு, கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் துவக்க விழாவில், ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான, கால்பந்து பயிற்சியாளர் பிஜூ பங்கேற்று பேசுகையில், "பழங்குடியின மாணவர்களுக்கு, கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவித்து, கல்வியறிவையும் மேம்படுத்த முடியும். போட்டிகளில் பங்கேற்கும் வகையில் முழுமையான பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.