உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு தானே கற்றல் கணித உபகரண பயிற்சி முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார வள மையத்தில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு தானே கற்றல் கணித உபகரண பயிற்சி முகாம் துவங்கியது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கமலநாதன் முகாமை பார்வையிட்டனர். கணித உபகரணங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதங்களை எளிய வழியில் கற்று கொடுக்க துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்