மணி மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா
கோவை: மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேசிய மாணவர் படை தின விழாவில், மரம் நடுதல், பல்லுயிர் புகைப்பட கண்காட்சி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தேசிய மாணவர் படை தினம், ஆண்டுதோறும் நவ., 4வது வாரம் தேசியளவில் கொண்டாடப்படுகிறது. மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை வகித்த கோவை மாவட்ட குரூப் கமாண்டர் கர்னல் ராய், பள்ளி வளாகத்ததில் மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து, பல்லுயிர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட என்.சி.சி., பயிற்சி அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் சிங்கராஜ், விங் கமாண்டர் மேத்யூ உட்பட பலர் பங்கேற்றனர்.