உள்ளூர் செய்திகள்

டில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க ஊட்டி மாணவனுக்கு வாய்ப்பு

ஊட்டி: ஊட்டி புனித ஜோசப் பள்ளி மாணவனுக்கு, டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊட்டி புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 75 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பள்ளி என்.எஸ். எஸ்., மாணவர்கள், பல்வேறு சமுதாய பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்றுள்ள, மாணவன் டேவிட் ராஜ், தென் மண்டல அளவில் இருந்து, டில்லி செங்கோட்டையில் வரும் 26ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தாண்டு குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்