அரசு இசைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டி நடந்தது. பரத நாட்டியம்: 5 முதல் 8 வயது பிரிவு போட்டியில் முதல் பரிசு கோபிகா, 9 முதல் 12 வயது பிரிவு முதல் பரிசு என்.நர்மதா, 13 முதல் 16 வயது பிரிவு முதல் பரிசு மகேஷ்வரன் பெற்றனர். கிராமிய நடனம்: இரண்டாம் பரிசை எஸ்.யுவராஜ், எம்.செல்லப்பாண்டி பெற்றனர். குரலிசை: முதல் பரிசு எஸ்.ஆர்., சுவாதி, கேந்திரிய வித்யாலயா பள்ளி ரிஷி பெற்றனர். வசந்த் 2ம் பரிசு பெற்றனர். ஓவியம்: வயதுபிரிவு வாரியாக முதல் பரிசை ஹரீஸ்குமார், பிரியதர்ஷினி, வைத்தீஸ்வரன் பெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு,சான்றுகளை தலைமை ஆசிரியை வழங்கினார். வெற்றி பெற்ற மகேஷ்வரன், எஸ்.ஆர்.,சுவாதி, ஹரீஸ்குமார், பிரியதர்ஷினி மாநில கலைப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.