உள்ளூர் செய்திகள்

ப்ரோலிக் கிளிக்யூ என்ற பல்துறை செயல் விளக்க பயிற்சி முகாம்

அவிநாசி: அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பைபாஸ் ரோட்டிலுள்ள ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில், ப்ரோலிக் கிளிக்யூ என்ற தலைப்பில் பல்துறை செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. அவிநாசி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். குதிரையேற்றம், கராத்தே, களரி, வில் வித்தை, சிந்தனைத்திறன் பயிற்சி, ரோபோட்டிக்ஸ், ஓரிகாமி, ஓவியம், அபாகஸ், விளையாட்டு என பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பாடங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக, சிந்தனை திறனை பெருக்குவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், கல்வி பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டன. அனைத்து குழந்தைகளும் பங்கேற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்