உள்ளூர் செய்திகள்

கவுரவ விரிவுரையாளர் சம்பள பிரச்னை: மனித உரிமை கமிஷனில் புகார்

மதுரை: தமிழகத்தில் அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து டில்லி தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் 109 அரசு கலை கல்லுாரிகளில் 4084 கவுரவ விரிவுரையாளர்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்றுகின்றனர். யு.ஜி.சி., தகுதியான பி.எச்.டி., நெட்/செட் முடித்த இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. மே யில் சம்பளம் இல்லை. கொரோனா ஊரடங்கால் கல்லுாரிகள் மூடப்பட்ட நிலையில் மார்ச் முதல் சம்பளப் பிரச்னை எழுந்தது. பலர் குடும்பத்தை காப்பாற்ற மாற்றுத் தொழிலுக்கு மாறினர்.இதுகுறித்து சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் டில்லியில் உள்ள தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்தார். அதில் &'யு.ஜி.சி., தகுதியுள்ள 4084 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்., முதல் ஆக., வரை தமிழகஅரசு சம்பளம் வழங்கவில்லை. மேலும் &'சமவேலை; சம ஊதியம்&' என்ற விதியை பின்பற்றாமல் மாதம் ரூ.57,700 க்கு பதில் ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்குகிறது&' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்