உள்ளூர் செய்திகள்

புதிய கல்வி கொள்கை கூட்டத்தை புறக்கணித்த அரசு முடிவுக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி: புதிய கல்வி கொள்கை காணொளி கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசின் முடிவை, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் கிருஷ்ணகிரியில் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மரியசாந்தி முன்னிலை வகித்தார். மகளிர் வலையமைப்பு செயலர் தவச்செல்வி வரவேற்றார். செயலாளர் அனுராதா கருத்துகளை கூறினார். இதில், புதிய கல்வி கொள்கை காணொளி கூட்டத்தை, தமிழக அரசு புறக்கணிப்பு செய்ததற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு வரவேற்கிறது. ஆசிரியர்களே பதவி உயர்வின் மூலம் இயக்குனராகும் நிலை தொடரவும், பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை ரத்து செய்யவும் வேண்டுகோள் விடப்படுகிறது. கொரோனா காலத்தில் அரசின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ள பள்ளி மாணவர்களையும், பெற்றோர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூற வட்டார வலையமைப்பு கேட்டுக் கொள்கிறது. கடந்த, 2018 மே, 18ல் வெளியான அரசாணை, 101ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்