ஸ்டிரைக் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை பட்டியல் அனுப்ப இயக்குனரகம் உத்தரவு
சென்னை: &'ஜாக்டோ - ஜியோ&' வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2019 ஜன., 22 முதல் 30 வரை காலவரையற்ற &'ஸ்டிரைக்&' நடத்தப்பட்டது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது, பள்ளி கல்வித் துறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதனால், ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன் பெறுதல், பதவி உயர்வு உட்பட ஆசிரியர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.எனவே, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய, ஜாக்டோ - ஜியோ கோரிக்கை விடுத்து வந்தது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் கூறப்பட்டது.இந்நிலையில், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் முதற்கட்டமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களை, பட்டியல் தயாரித்து இயக்குனரகத்துக்கு அனுப்புமாறு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.