அரசு சேவை இல்ல மாணவியர் பள்ளிக்கு செல்ல பஸ் இயக்கம்
கடலுார் செம்மண்டலம் அரசு சேவை இல்லத்தில் தங்கியுள்ள 60க்கும் மேற்பட்ட மாணவியர் மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இம்மாணவிகள் பள்ளி சென்று வர அரசு சேவை இல்லத்தில் இருந்து காலை மற்றும் மாலையில் அரசு பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், அயப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்துகொண்டு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.சமூக நலத்துறை அலுவலர் கோமதி, கண்காணிப்பாளர் ஜெயந்தி, சேவை இல்லம் கண்காணிப்பாளர் அமுதா, மாவட்ட தி.மு.க., முன்னாள் பொருளாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.