உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்.,- பி.டி.எஸ் படிப்பு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள்.தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் நடத்துகிறது.இதற்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நேற்றுடன் (ஜூலை 10) முடிய இருந்த நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப் பட்டது.அதன்படி, https://tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் நாளை மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை, 33,000த் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த வாரம் முதல் மாணவர் சேர்க்கையை நடத்த, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்