நாட்டின் வளர்ச்சிக்கு தரமான கல்வி முக்கியம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த புதிய பள்ளி கட்டட திறப்பு விழாவில், முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பேசியதாவது: நாடு வளர்ச்சியடைய, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டியது அவசியம். அதேபோல் கட்டாயம் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என அம்பேத்கர் எப்போதும் கூறிவந்தார். அவர் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து, வெளிநாட்டில் இருந்து சிறந்த கல்வியைப் பெற்றவர். டில்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் இப்போது அங்கு படிக்கிறார்கள். டில்லியில் சில இடங்களில் நிலவி வரும், குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும். டில்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.