மதுரையில் இன்று துவங்குகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மதுரை: கோயில் நகரமான மதுரையின் மாபெரும் அடையாளமான தினமலர், சத்யா இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று (ஆக.,3) மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார்.மதுரையில் பொழுதுபோக்கு அம்சங்களே இல்லையே... எங்கே தான் போறது என தவிக்கும் மக்களுக்காகவே ஆண்டுதோறும் வருகிறது இந்த 5 நாள் ஷாப்பிங் திருவிழா. ஆமாங்க... ஆமா. இன்று முதல் ஆக., 7 வரை நடக்கும் திருவிழாவில் நீங்கள் ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்.அழகிற்கு அழகு சேர்க்கலாம்இதுமாதிரி இதுவரை பார்த்ததே இல்லையே என மூக்கில் விரல் வைக்கும் பெண்களுக்காகவே அழகு சாதனங்கள், பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், சாரீஸ், ரெடிமேட் டிரஸ் ஸ்டால்கள் பல உங்களை வரவேற்கும். வெளிமாநில, வெளிநாட்டு ஸ்டால்களும் உண்டு. அழகிற்கு அழகு சேர்க்க உங்கள் கைகளில் டிசைனர் மெகந்தி இலவசமாக வரையலாம். நம்ம இளைஞர்களுக்கான ரெடிமேட் சர்ட், டிசர்ட், உள்ளிட்ட ஆடைகளும் கிடைக்கும்.திருவிழா கூட்டத்தில் ஷாப்பிங்திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா கூட்டம் நிரம்பி வழியும் அரங்கில் நீங்கள் நீந்தியபடி ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, ஸ்மார்ட் போன், டிசைனர் லைட்ஸ் உட்பட பலவித பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். பல ஸ்டால்களில் தள்ளுபடி, இலவசம், சாம்பிள்களும் கொடுப்பாங்க.புட்கோர்ட்டில் ருசியான விருந்துவிதவிதமான பொருட்களை வாங்கி மனசுக்கு விருந்து கொடுத்தாச்சு... அடுத்து வயிற்றுக்கு விருந்து கொடுக்க வேண்டாமா... கிளம்புங்க புட் கோர்ட் பக்கம்... மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை, ஸ்பைரல் சிப்ஸ், பிரஷ் ஜூஸ் எல்லாம் ருசிக்கலாம். ரெடி மிக்ஸ், பஜ்ஜி, போண்டா, வடை, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஹோம் மேட் சாக்லேட்ஸ், ஐஸ்கிரீம், குல்பி வாங்கலாம்.இது குழந்தைகளுக்கான ஏரியாகண்காட்சியில் குழந்தைகள் கொண்டாடும் போத்தீஸ் கேம் ஸோன் ஏரியாவில் பேட்டரி கார், வாட்டர் போட், சிக்கு புக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் சூட்டிங் என ளைாட்டு அம்சங்கள் பல கவனம் ஈர்க்கும். ஸ்டால்களில் பொம்மைகள், புத்தகங்கள் வாங்கலாம். கலர் பலுான்களும் இலவசமாக தருவாங்க. டூவீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி என தடபுடலான ஏற்பாடுகளை பண்ணியிருக்கோம். இ.சி.டெக் நிறுவனம் சார்பில் &'சிசிடிவி&' கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை இணைந்து வழங்குவோர்: ஆனந்தா அண்ட் ஆனந்தா, பானோசானிக் முத்து, கோவை லட்சுமி, தேனி ஆனந்தம், நேஷனல் ஜூட் போர்டு.ஆடிப்பெருக்கான இன்றேகண்காட்சிக்கு கிளம்புங்கதினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஆடிப்பெருக்கான இன்று (ஆக., 3) துவங்குகிறது. ஆடிப்பெருக்கில் பொருட்களை வாங்கினால் அது பல மடங்காக பெருகும் என்பதால் முதல் நாளான இன்றே கண்காட்சிக்கு கிளம்பி வாங்க. ஆடி ஆபர், தள்ளுபடி, சாம்பிள் என பலவித சலுகைகளும் நம்ம கண்காட்சியில் கிடைக்கும். சந்தையில் அறிமுகமான புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள் உட்பட பல எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கிச்சன் பொருட்களை இங்கே மட்டும் தான் வாங்க முடியும். ஒருமுறை கண்காட்சிக்கு வரும் நீங்கள் ஆக., 7 வரை வருவது உறுதி. அந்தளவிற்கு பொக்கிஷங்கள் பல கொட்டி கிடக்குது... கடல் போன்ற கண்காட்சி அரங்கில்!இன்றுகிளம்பிட்டீங்களா...தினமலர் ஷாப்பிங் திருவிழாவுக்குதமுக்கம், மதுரை, ஆக., 3 முதல் 7; கண்காட்சி நேரம்: தினமும் காலை 11:00 - இரவு10:00 மணிடிக்கெட் கொடுக்கும் நேரம்: காலை 11:00--இரவு 9:00 மணி(இன்று மட்டும்: காலை11:30-- இரவு 9:00 மணி)தமுக்கம் மைதானம் மதுரை,250 ஏ.சி., ஸ்டால்கள்; நுழைவு கட்டணம் ரூ.50(6 வயதிற்கு மேல்).