உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: போலீஸ் நடவடிக்கை தேவை

கூடலுார்: பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் உள்ளனர்.கூடலுாரில் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. தினந்தோறும் மாநில நெடுஞ்சாலை வழியாக மாணவிகள் பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர். இந்த நேரத்தில் பல ரோமியோக்கள் டூவீலர்களில் பின் தொடர்ந்து சென்று மாணவிகளிடம் ரகளையில் செய்வது தொடர்கிறது.மேலும் பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டமாக நின்று மாணவிகளை கிண்டல் செய்வது வாடிக்கையாக நடக்கிறது. இது தொடர்பாக மாணவிகள் சிலர் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் ஜெகன் கூறும்போது:அடிக்கடி நடக்கும் இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கு காலை, மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்