அங்கன்வாடி குழந்தைகளை மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் ஆசிரியை மீது புகார்
பெலகாவி: பெலகாவி, ராம்துர்கா ஒபலபுரா கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, ஆசிரியையாக இருப்பவர் சுமித்ரா லமானி, 40. ஹிந்துவாக இருந்த அவர், கிறிஸ்துவராக மதம் மாறினார்.இந்நிலையில், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளை மதமாற்றம் செய்ய, சுமித்ரா லமானி முயற்சி செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை, அங்கன்வாடி உதவியாளர் ரேணுகாவும் உறுதி செய்து உள்ளார். தன்னையும் மதம் மாற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று, சுமித்ரா லமானியிடம், கிராம மக்கள் கூறியும் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக், கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவர் கூறுகையில், மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் இருந்தும், மதமாற்றம் நடக்கிறது. சோனியாவை மகிழ்விக்க, காங்கிரஸ் அரசு அமைதியாக உள்ளது. அங்கன்வாடி ஆசிரியை சுமித்ரா லமானியை உடனடியாக, கைது செய்ய வேண்டும். கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம், என்றார்.