உள்ளூர் செய்திகள்

பள்ளி இடை நிற்றல் மாணவர்கள் நேரில் சந்தித்து கலெக்டர் அறிவுரை

கூடலுார்: மசனகுடியில், இடைநீற்றல் அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் சந்தித்து, படிப்பை தொடர அறிவுறுத்தினார்.முதுமலை, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, 3.52 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடம்; பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1.76 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை, மாநில முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.இதற்கான நிகழ்ச்சி, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார்.சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களின் நல காக்க, முதல்வர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பணியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.தொடர்ந்து, பள்ளியில் பயின்று இடை நின்ற மாணவர்கள் வீடுகளுக்கு கலெக்டர் நேரில் சென்று, பெற்றோரை சந்தித்து, கல்வியின் முக்கியத்துவம்; மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் எடுத்துக் கூறி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்