உள்ளூர் செய்திகள்

இளைஞர்கள் இயக்கிய விழிப்புணர்வு குறும் படம்: தேர்தல் கமிஷன் தேர்வு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பரத் கிஷோர் மற்றும் ராஜ் ஈஸ்வர் ஆகிய இது தேர்தல் நேரம் என்ற தலைப்பில் மூன்று குறும்படங்களை இயக்கினர். இந்த குறும்படங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று குறும்படங்களும் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் உள்ள 500 தியேட்டர்களில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.அந்த விளம்பர படங்களில் பல வாக்காளர்கள் தவறான வேட்பாளரை தேர்ந்தெடுக்காமல் தங்கள் ஓட்டுகளை தவறாமல் செலுத்தி ஒரு நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறும்படகளில் பிரபல நகைச்சுவை நடிகர் படவா கோபி, ராகுல் தாத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்