டைம் இதழ் பட்டியலில் இடம்பெற்ற கோவை தமிழர் பிரியம்வதா நடராஜன்
வாஷிங்டன்: கோவையில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது டைம் இதழ். இதில், 2024 ல் ஏப்.,ல் வெளியான உலகளவில் தாக்கம் ஏற்படுத்திய டாப்-100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன் இடம்பிடித்துள்ளார்.யார் இவர்பிரியம்வதா நடராஜன் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பிறந்தவர். டில்லியின் ஆர்கே புரத்தில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.பிரியம்வதா நடராஜன் யேல் பல்கலையில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியர் ஆக பணிபுரிகிறார். பல்கலையில் வானியல் துறை தலைவர் ஆகவும், பெண் பேராசிரியர் அமைப்பின் தலைவர் ஆகவும் உள்ளார்.மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலையில் இயற்பியல் மற்றும் கணிதவியல் பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு மற்றும் தத்துவ பாடங்களிலும் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பிஎச்டி முடித்தார்.பிளாக் ஹோல்ஸ் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2022ம் ஆண்டு லிபெர்டி அறிவியல் மையத்தின் விருதை பெற்றார்.Mapping the Heavens: The Radical Scientific Ideas That Reveal the Cosmos என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2016ம் ஆண்டு வெளிவந்தது.