உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி. நெட் தேர்வு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: முறைகேடு புகார் எதிரொலியாக நெட் தேர்வை திடீரென ரத்து செய்து மத்திய அரசு நேற்று (19ம் தேதி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது.நெட் -2024 தேர்வுகள் நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப்பிரிவிலிருந்து யு.ஜி.சி.க்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நெட் 2024 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிய தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, புனித் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 2024 நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நெட் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்