உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் மொபைல் போன் தடை; அமெரிக்கா மாகாணத்தில் மசோதா நிறைவேற்றம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பள்ளிகளில் மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.மாகாண சட்டசபையில் மசோதாவுக்கு ஆதரவாக 76 ஓட்டு பதிவானது; எதிராக யாரும் ஓட்டளிக்கவில்லை. ஆனால், செனட் சபையில் ஆதரவாக 38 ஓட்டுகளும் எதிராக ஒரு ஓட்டும் பதிவானது. மசோதாவிற்கு, கலிபோர்னியா கவர்னர் காவின் நியூசம் கையெழுத்திட்டு ஓப்புதல் அளித்தார்.ஏற்கனவே, இந்தாண்டு 13 மாகாணங்களில் பள்ளி வளாகத்தில் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல், லாஸ்ஏஞ்சல்ஸில் அரசு பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.தொடர்ந்து, கலிபோர்னிய பள்ளிகளில் படிக்கும் 59 லட்சம் பள்ளி மாணவர்கள், வரும் 2026 ஆண்டு முதல் மொபைல் போன் பயன்படுத்த தடை அமலாகிறது.பள்ளி மாணவர்களின் கல்வி, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றை பாதிக்கும் மொபைல் போன்கள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால், இம் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்