உள்ளூர் செய்திகள்

பைபர் கான்கிரீட் அறிமுகம் செய்த ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு ரைலம் விருது

சென்னை: சர்வதேச அளவில் கட்டுமானத் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், துறை சார்ந்த வல்லுனர்கள், ஆய்வாளர்களுக்கு ரைலம் விருது வழங்கப்படுகிறது.சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவீந்திர கெட்டுவின், பைபர் கான்கிரீட் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து ரைலம் விருதை வழங்கியுள்ளது.இதுகுறித்து அவர் கூறியதாவது:சிவில் இன்ஜினியரிங் துறை சார்ந்த ஆய்வுகளில் பல ஆய்வகத்துக்குள்ளேயே முடங்கி விடுகின்றன. காரணம், புதிய கண்டுபிடிப்புகளை கட்டுமான துறை நிறுவனங்கள் ஏற்பதில் தயக்கம் காட்டுவதுதான்.நான் அவற்றை கொண்டு செல்லும் வகையில், சோதனை முயற்சியாக கட்டுமான துறையில் அவற்றை பயன்படுத்தி கட்டுமான துறையினருக்கு விளக்கி உள்ளேன். கான்கிரீட்டுகளில் ஏற்படும் விரிசல்களை சரி செய்யும் வகையில், சிமென்ட் சார்ந்த பொருட்களால் வலுவூட்டும் வகையில் பைபர் கான்கிரீட் முறையை பிரபலப்படுத்தி உள்ளேன்.கடந்த 10 ஆண்டுகளில் சுரங்கம், பாலம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டுமானங்களில், அவற்றின் உறுதித்தன்மை மேம்பாடு, நிலைத்த வளர்ச்சி, குறைந்தளவு கனிம பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கடைப்பிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரவீந்திர கெட்டு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்