அரசு கிடங்கில் வைக்கப்பட்ட புத்தகங்கள் தீயில் எரிந்து நாசம்
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், புத்தக கிடங்கு உள்ளது.நடப்பு கல்வியாண்டில், செங்கல்பட்டு மாவட்ட மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டு, எஞ்சிய புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன.நேற்று மதியம், இந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதை கண்ட என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வில்லியம்ஸ், காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீயில், நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிந்து நாசமாகின. பல புத்தகங்கள், தண்ணீரில் நனைந்து பாழாகின.மறைமலை நகர் போலீசார், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக தீ வைத்தனரா என, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர். தீப்பற்றிய புத்தகங்கள் 2017, 2018ம் ஆண்டு அச்சிட்ட புத்தகங்கள் என தெரிகிறது.