உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: எச்.எம்.பி.வி., வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக, பொது இடத்தில் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.கர்நாடகா, குஜராத்தை தொடர்ந்து தமிழகத்தில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சீராக உள்ளனர். உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.தமிழக சுகாதார துறை அறிக்கை:எச்.எம்.பி.வி., வைரஸ் புதிய வைரஸ் அல்ல. 2001 ல் கண்டறியப்பட்டது.எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு குறித்து, இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளுடன் தமிழக கூடுதல் செயலாளர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில், எச்.எம்.பி.வி., வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய அரசு தெளிவாக விளக்கியது.அதன்படி, தமிழக அரசு, பொதுமக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருமல், தும்மல் வரும்போது, வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். பொது இடத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்