உள்ளூர் செய்திகள்

மாணவி பாலியல் வன்முறை வழக்கு; விசாரணை குழு டி.எஸ்.பி., ராஜினாமா

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழுவில் பணிபுரிந்த, சைபர் குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டது தொடர்பாக, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டு உள்ளார்.கேள்வி எழுந்ததுஅவர் மாணவியிடம், சார் ஒருவருடன் இருக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது.இவ்வழக்கு குறித்து விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துஉள்ளது.இந்தக் குழுவிற்கு உதவியாக, சென்னை அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில், டி.எஸ்.பி.,யாக பணிபுரியும் ராகவேந்திரா கே.ரவி, 45, செயல்பட்டு வந்தார்.அவர், சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள உயர் அதிகாரிகள் தன்னை சுதந்திரமாக பணி செய்ய விடாமல், கடுமையாக நடந்து கொண்டனர். அதனால், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பணியில் இருந்து விலகுகிறேன் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.மேலும், தன் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக, டி.எஸ்.பி., பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது மொபைல் போன், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ராகவேந்திரா கே.ரவி, சென்னையைச் சேர்ந்தவர். சென்னை பல்கலையில் இளங்கலை கணினி அறிவியல் படித்தார்.ஜெர்மனியில் உள்ள பல்கலையில், அதே பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, அங்கேயே பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு, அமெரிக்காவில் கணினி மென்பொறியாளராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தார்.கடந்த 2010ல் சென்னை திரும்பினார். டில்லி சென்று ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார்.அதன்பிறகு, சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். 2018ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக காவல் துறையில் டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார்.அவர் திடீரென, மாணவி பாலியல் வன்முறை வழக்கு விசாரணை குழு பணியில் இருந்து விலகியது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்