உள்ளூர் செய்திகள்

கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த கள ஆய்வின் போது 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். அவர் மாணவனுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த செய்தியை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வாழ்த்துகள் விருதுநகர் கலெக்டர். கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியுள்ளோம்.ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள். இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும். உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை என அவர்களுக்கு உணர்த்துங்கள்.காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்