உள்ளூர் செய்திகள்

கல்வி அலுவலர்களுக்கான விருப்ப மாறுதல் அறிவிப்பு தினமலர் செய்தி எதிரொலி

மதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக கல்வி அலுவலர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வை இன்றும் நாளையும் (அக்.,5) நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இத்துறையில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர், நிதியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜூலை முதல் வாரத்தில் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதன் பின் கண்காணிப்பாளர், உதவியாளர்கள் என மாநிலம் முழுவதும் 250 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இதை விருப்ப மாறுதலில் நிரப்ப வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்து, விண்ணப்பங்கள் அளித்து காத்திருந்தனர்.அமைச்சர் அலுவலகம் பரிந்துரைக்கும் அலுவலர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்கப்படுவதாகவும், விருப்ப விண்ணப்பம் அளித்தவர்களை கண்டுகொள்ளவில்லை எனவும் சர்ச்சை எழுந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் அக்.,1ல் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக இன்றும், நாளையும் பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வை ஆன்லைனின் நடத்தவும், விருப்ப விண்ணப்பம் அளித்தவர்கள் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களிலேயே பங்கேற்று மாறுதல் பெறலாம் எனவும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுப்பு) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்