பாதிக்கும் குறைவான சம்பளம் தருவதா? கல்லூரி பேராசிரியர்கள் வேலை நிறுத்தம்
காரமடை: காரமடை அடுத்த குட்டையூரில், மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல பாட பிரிவுகள் உள்ளன. 1,300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 45 பேராசிரியர்கள் வேலை செய்கின்றனர்.கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தது. கல்லூரியில் 37 பேராசிரியர்கல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்.கூட்டமைப்பின் மாநில தலைவர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயத்த ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், பாதிக்கும் குறைவாக மாதம் 25,000 ரூபாய் தான் தருகின்றனர். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், ஆகியவை முக்கிய கோரிக்கைகள். அவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.ஸ்டிரைக்கால் வகுப்புகள் நடக்கவில்லை. பேராசிரியர்கள் வராததால், வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.