உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ் மரபு உணவு திருவிழா

புதுச்சேரி: பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரித் தமிழ்த்துறையில் தமிழ் மரபு உணவுத் திருவிழா நடந்தது.ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்புரையாற்றார். கல்லுாரி முதல்வர் மதிவாணன் தமிழ் மரபு உணவுக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.தமிழ்த்துறைத் தலைவர் சேதுபதி உணவுத் திருவிழாவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார்.ஆங்கிலத் துறையின் தலைவர் சுரேஷ், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய முன்னாள் பிரஞ்சுத் துறைத் தலைவர் வெங்கட சுப்புராய நாயகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் நாடு அரசின் சிறந்த நுாலுக்கான விருது பெறவுள்ள மணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.உணவு திருவிழாவில் புதுச்சேரி மீன் குழம்பு, கம்பு அடை, இறால் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சியில் மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தன. முனைவர் நாகரத்தினம், பேராசிரியர் கீதா ஆகியோர் அரங்க ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். ஏற்பாடுகளை முனைவர்கள் குப்புசாமி, மோகன், அமிர்தவள்ளி, கோமதி, குமுதவள்ளி, தயாநிதி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாணவி ரீட்டா மரி திரேஸ்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவி தரணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்