நாமக்கல் சக்சஸ் பாயின்ட் நிறுவனத்தில் லண்டன் பல்கலைக்கு மாணவர் சேர்க்கை
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலையில், சக்சஸ் பாயின்ட் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில், லண்டன் யுனிவர்சிட்டி ரோகாம்டன் பல்கலைக்கழகான மாணவ, மாணவியர் சேர்க்கை முகாம் நடந்தது. நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜதுரை துரைசாமி தலைமை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரி வளர்மதி ராஜதுரை முன்னிலை வகித்தார். பல்கலையின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, விதி மிஸ்டிரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது, மாணவர்களின் கல்வி, உதவித்தொகை, விஷா நடவடிக்கை, தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, லண்டன் பல்கலையில் இணைந்து படிப்பதற்கான உடனடி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.