உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான நீச்சல் போட்டி: சென்னை மாணவர்கள் பதக்க மழை

சென்னை: செங்கல்பட்டில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில், சென்னை சார்பில் பங்கேற்ற மாணவ மாணவியர் பதக்கங்கள் குவித்து அசத்தியுள்ளனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், இருபாலருக்குமான அகில இந்திய தரவரிசை நீச்சல் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது.இதில், தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை மாணவ, மாணவியர், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்து, பதக்கங்களை குவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கான 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ஜூனியர் பிரிவில், சென்னையின் கிருத்திக் வைபவ், மாணவியர் பிரிவில் சென்னையின் ஏஞ்சலின் வேதா ஆகியோர், முதலிடம் பிடித்தனர்.அதே போல், 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் சூப்பர் சீனியர் மாணவர் பிரிவில், சென்னையின் அத்வைத் சுவாமிநாதன் முதலிடம் பிடித்தார். மேலும், 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் கல்லுாரி மாணவர் பிரிவில், சென்னையின் மோனிஸ் குமார் முதலிடம் பெற்றார்.தொடர்ந்து நடந்த பள்ளி மாணவர்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் சூப்பர் சீனியர் பிரிவில், சென்னையின் யோகித் முதலிடம் பிடித்தார். மாணவியர் சூப்பர் சீனியர் பிரிவில், தீப்சிகா முதலிடம் பிடித்து அசத்தினார்.தொடர்ந்து நடந்த சிறப்பு மாணவர்களுக்கான 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில், சென்னையின் நிதில் சரண் முதலிடம் பிடித்தார். ராகவ் பெருமாள் இரண்டாம் இடமும், ஸ்ரீசரண் மூன்றாம் இடமும் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்