சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை
சின்னசேலம்: சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அபார சாதனை புரிந்துள்ளனர்.சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை புரிந்துள்ளனர். பள்ளியில் மாணவன் தினகர் 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஆயிஷா சித்தீகா 482 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். மாணவி கனிஷ்கா 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.பள்ளியில் அறிவியல் பாடத்தில் மூன்று மாணவர்கள் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் முத்துசாமி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் விஜயகுமார், இணை செயலாளர் அருண்குமார், துணை தலைவர் காளியப்பன் மற்றும் கல்வி குழு இயக்குனர்கள் சண்முகம், ராஜமாணிக்கம், பள்ளியின் முதல்வர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.