உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு: தி.மு.க., ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக, சட்டசபையில் அரசு தனி தீர்மானத்தை முன்மொழிந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவால் தமிழகத்தில், 3.28 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வை பெற முடியும். தேர்ச்சி பெறவில்லை என்றால், பணியிழப்புக்கு ஆளாக நேரிடும்.கடந்த 20 ஆண்டுகள் வரை, தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கி கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித்தேர்வு எழுத வற்புறுத்துவது, அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயல். எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பான தீர்மானம் முன்மொழியப்படுகிறது.அதன்படி, தமிழக பள்ளிகளில், 2010ம் ஆண்டுக்கு முன் இருந்த நடைமுறை விதிகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான தெளிவான சுற்றறிக்கையையும், மத்திய அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு பேசினார்.இந்த தீர்மானத்திற்கு, தி.மு.க., உட்பட கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்