கோட்டக்கரை பள்ளியில் மின்னணு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி
கள்ளக்குறிச்சி: கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மின்னணு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் மின்னணு கழிவுகள் சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகா வழிகாட்டுதல்படி, பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளி உதவி ஆசிரியர் வினோத் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பயன்படுத்த முடியாத அல்லது வீசப்படும் மின் மற்றும் கணினி பாகங்கள், செல்பேசிகள், தொலைக்காட்சிகள், மின்கலங்கள் போன்றவைகளை பாதுகாப்பாக சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட மின்னணு கழிவுகளை உரிய வழிகாட்டுதலின்படி, அந்தந்த வட்டாரங்களில் அருகிலுள்ள சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் உருவாகும் மின்னணு கழிவுகள் தொடர்பான விவரங்களை சுற்றுச்சூழல் மன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி, ஏற்றனர்.