ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு துவக்கம் பணியிட மாற்றம் பெற்ற 12 ஹெச்.எம்.,
ஈரோடு: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், மாவட்டத்துக்குள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 12 பேர் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று துவங்கியது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமையில் பொது மாறுதல் கலந்தாய்வு துவங்கியது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கு கலந்தாய்வு நடந்தது.மொத்தம், 23 பணியிடங்களுக்கு, 32 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 12 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். இன்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது.