என்.ஆர்.ஐ., சீட்டுகள் ஒதுக்கீடு: புதுவை கிராமப்புற மாணவர்கள் மகிழ்ச்சி
புதுச்சேரி: கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவு நனவாகியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. 22 என்.ஆர்.ஐ., சீட்டினை புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கியதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் படிப்பு கனவு நனவாகியுள்ளது. மண்ணாடிப்பட்டை சேர்ந்த மாணவி சவுந்தர்யா கூறும்போது "பிளஸ் 2 வகுப்பில் 1160 மதிப்பெண் பெற்று, சென்டாக் தரவரிசை பட்டியலில் பொது பிரிவில் 52வது இடத்தை பிடித்தேன். என்.ஆர்.ஐ.,சீட்டுகள் அதிகப்படுத்தியதால் எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். கிருமாம்பாக்கம் மாணவர் சண்முகபிரியன் கூறுகையில், "22 என்.ஆர்.ஐ.,சீட்டு ஒதுக்கி இருக்காவிட்டால், எனக்கு கவுன்சிலிங்கில் இந்தாண்டு எம்.பி. பி.எஸ்.,சீட் கிடைத்திருக்காது. கடுமையான நிதி நெருக்கடியிலும் புதுச்சேரி மாணவர்களுக்காக சீட்டை ஒதுக்கியுள்ளது. படித்த முடித்த பிறகு, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவையாற்றுவேன்" என்றார்