தூய்மை இந்தியா குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்
பந்தலூர்: தூய்மை இந்தியா குறித்து, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் பந்தலூரில் நடத்தப்பட்டன. நெல்லியாளம் நகராட்சி துப்புரவுத்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் தூய்மை இந்தியா குறித்த சிறப்பு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்; பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது. பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பள்ளி ஆசிரியர்கள் சித்தானந்த், அப்துல்சமது, சுகைனா, வீட்டாமேரி ஆகியோர் மேற்பார்வையில், அரசு மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.