அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அவலூர்பேட்டை: மேல்அருங்குணம் காலனியில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் மேல்அருங்குணம் கிராமத்தில் ஊரிலும் , காலனியிலுமாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. காலனிப் பகுதியில் வாடகை கட்டடத்தில் ஒரு அங்கன்வாடி மையம் 2005ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. இந்த மையத்தில் தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த கட்டடம் பழுதடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நலன் கருதி மையத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.