ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு புதிய திட்டங்களை துவக்கிய அரசு
சென்னை: தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தகுந்த சூழலை அமைத்து, தொழில் துறையில் உலகின் தலைசிறந்த இடமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின், புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வாயிலாக, ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் துவக்க நிலை செலவுகளை குறைக்க, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் அன்பரசன், சென்னை, நந்தனத்தில் நேற்று துவக்கி வைத்தார்.மேலும் அவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, &'பிராண்டிங்&' எனப்படும் வணிக நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கும் திட்டம், புத்தாக்க சவால் இணையதளத்தையும் துவக்கி வைத்தார்.பின், அன்பரசன் பேசியதாவது:மனிதவள மேலாண்மை, நிதி, சட்ட ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் சார்ந்த சேவைகளை புத்தொழில் நிறுவனங்கள் சலுகை விலையில் கிடைக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புத்தாக்க சவால் இணையதளத்தில் அரசு துறைகள், பெரிய நிறுவனங்கள் தங்களின் பிரச்னைகளுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வாயிலாக தீர்வு காண முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அந்த இணையதளத்தில் பதிவு செய்து,ஆலோசனை வழங்கலாம்.ஒரு பொருளை விற்பனை செய்வதற்கு, பிராண்டிங் அவசியம். எனவே, அதுதொடர்பான பயிற்சியில் பங்கேற்று புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம்.தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தகுந்த சூழலை அமைத்து, தொழில் துறையில் உலகின் தலைசிறந்த இடமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின், ஸ்டார்ட் அப் டி.என்., வாயிலாக புதிய திட்டங்களை நிறைவேற்றி வைக்கிறார்.அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு, ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் வழியலாக, நிதி உதவி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், துறை செயலர் அர்ச்சனாபட்நாயக், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.