உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி

கிருஷ்ணகிரி: வேளாண் கல்லுாரி, 4ம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஓசூர் அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் சார்பில், வேளாண் உதவி இயக்குனர் ஜான்லுார்து சேவியரின் தலைமையில், 11 பேர் கொண்ட இளமறிவியல் வேளாண், 4ம் ஆண்டு மாணவர்கள் குழு, ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.இறுதியாண்டு மாணவர்கள், 11 நபர்களுக்கு நியமித்துள்ள ரத்னகிரி, ஊடேதுர்கம், போடிசிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, உளிமங்கலம், குந்துமாரனப்பள்ளி, ஆனேகொள்ளு, பிதிரெட்டி, தாவரக்கரை, சந்தனப்பள்ளி, பைரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு தனித்தனியாக சென்று அங்குள்ள விவசாயிகளிடம் உரையாடவும், விவசாயிகள் பின்பற்றும் பாரம்பரிய விவசாய செயல்முறை மற்றும் பயிர் திட்டங்களை அறிந்து, அவற்றை அட்டவணை படுத்தவும், அரசின் பல்வேறு வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி, வேளாண் உதவி இயக்குனர் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.மேலும், கல்லுரியில் கற்றறிந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன விவசாய இயந்திரங்களை பற்றி எடுத்துரைத்து, செயல்முறை விளக்கங்களையும் கொடுக்க உள்ளனர். அதனால் விவசாயிகள் அனைவரும் மாணவர்களுக்கு ஒத்துழைக்குமாறு, வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்