உள்ளூர் செய்திகள்

நுாலக சுவரில் சர்ச்சை வாசகம் ஹிந்து அமைப்பினர் கொதிப்பு

சிக்கபல்லாபூர்: நுாலகம் ஒன்றின் நுழைவு வாசல் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள், சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.பொதுவாக கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நுாலகம் ஒன்றில் எழுதி வைக்கப்பட்ட வாசகம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிக்கபல்லாபூரின், முத்தேனஹள்ளி கிராமத்தில், பஞ்சாயத்து நுாலகம் அமைந்துள்ளது.நுாலகத்தின் சுவரில், ஒரு கோவில் கட்டினால், ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் உருவாவர்; ஒரு நுாலகம் கட்டினால், ஆயிரக்கணக்கான வித்வான்கள் உருவெடுப்பர் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹிந்து அமைப்பினர் கொதிப்படைந்துள்ளனர்.புத்தகங்கள் படிப்பது நல்ல விஷயம்தான். அதற்காக கோவில் கட்டினால், பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறுவது சரியல்ல. உடனடியாக வாசகங்களை அழிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்