உள்ளூர் செய்திகள்

இந்தக் காலத்தில் ஓவியங்களாக அந்தக் கால மருத்துவ முறைகள்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, கடந்த, 2022 ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது.மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர, ஆங்காங்கே மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களுடன் வளாகத்தில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன.நைட்ரஸ் ஆக்சைடு செயல்பாடு, 1800களில் துவங்கியது; ரத்தத்தை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறும் திட்டம், 1818களில் வந்தது; அறுவை சிகிச்சைக்கு ஒருவரை தயார்படுத்த மருந்துகள் மூலம் ஒருவரை மயக்கமுற செய்யும் வழிமுறை, 1846களிலேயே இருந்துள்ளது ஆகியவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிட்டுள்ளனர்.ஸ்டெதாஸ்கோப் கண்டுபிடிக்கும் முன், நெஞ்சில் காது வைத்து நோய்வாய்ப்பட்டவர் உயிருடன் இருந்துள்ளாரா, துடிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் முறை இருந்துள்ளது. அத்துடன், ஒரு கூம்புவடிவ குழாயை நெஞ்சில் அழுத்தி பிடித்தும், சுவாசத்தை அறிந்து கொண்டனர்.இம்முறை, 1816களிலே இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.கண் மருத்துவம், பூதக்கண்ணாடி எனப்படும் லென்ஸ் உதவியுடன் கண் சார்ந்த மருத்துவம், 1841ல் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரங்கம் முழுதும், ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் வரையப்பட்டுள்ள, பழங்கால மருத்துவமுறை குறித்த ஓவியங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்