மேற்படிப்புக்கு பிரிட்டன் செல்லும் மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்
நாமக்கல்: நாமக்கல், சக்ரவர்த்தி ஸ்டடி அப்ராடு நிறுவனத்தின் சார்பில், மேற்படிப்பிற்கு பிரிட்டன் செல்லும் மாணவர்களுக்கு, இலவச விமான டிக்கெட் வழங்கப்பட்டது.நாமக்கல் பரமத்தி ரோடு ஏ.டி.சி., டெப்போ எதிரில் சக்ரவர்த்தி ஸ்டடி அப்ராடு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில், செப்., 24ல் இன்டேக்கில் பிரிட்டனுக்கு மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கான வழியனுப்பும் முன்னேற்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரிட்டன் செல்லும் மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்பட்டது. இதில், சக்ரவர்த்தி ஸ்டடி அப்ராடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் யு.கே செல்லும் மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.