உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க பெற்றோர் கோரிக்கை

உடுமலை : பருவநிலை மாற்றம் காரணமாக தொற்று நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மழை காலங்களிலும், கோடை வெப்பம் அதிகரிக்கும் நேரங்களிலும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரிக்கின்றன.இத்தகைய நேரங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வதற்கு நிலவேம்பு குடிநீர் பள்ளிகளில் வழங்கப்பட்டது.ஆனால் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. தன்னார்வல அமைப்புகளின் மூலமாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாயிலாகவும் மட்டுமே அவ்வப்போது, அதிலும் ஒருசில பள்ளிகளில் தான் வழங்கப்படுகிறது.பள்ளி செல்லும் மாணவர்கள், இதுபோன்ற நோய்த்தொற்று காலங்களில் உடல்நலத்துடன் இருப்பதற்கு, இந்த நிலவேம்பு குடிநீர் பயனளிப்பதாக பெற்றோரும் தெரிவிக்கின்றனர். உடுமலை பள்ளிகளில் மீண்டும் இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்