போதை இல்லா தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம்; முதல்வர் அழைப்பு!
சென்னை: போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் சமுதாயத்திற்கு, உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள்.போதையின் பாதையில் யாரும் போக கூடாது என்று மன்றாடி கேட்கிறேன். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம். தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.