உள்ளூர் செய்திகள்

இம்மாத இறுதிக்குள் சம்பளம்; பட்டதாரி ஆசிரியர்கள் முறையீடு

கோவை : இம்மாத இறுதிக்குள் சம்பளம் பெற நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முறையிட்டுள்ளது.தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாதத்தின் முதல் வாரத்திற்கு பின்னரே சம்பளம் வழங்கப்படுகிறது.இதுவரை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகங்களில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஊதியப்பட்டியல் தயாரிக்கப்படவில்லை என தெரியவருகிறது. எனவே, அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் அக்., மாத சம்பளத்தை பண்டிகையை முன்னிட்டு, இம்மாத இறுதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்